திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.
இதில் காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்குவதில் அதிகாரிகள் பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டிய திருநங்கைகள் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தங்களின் காளைகளுக்கு டோக்கன் கிடைத்ததில்லை எனவும்,
குழுக்கல் முறையில் வழங்கப்படும் டோக்கன் அமைச்சர்கள் மற்றும் நடிகர்களுக்கு எளிதில் கிடைப்பது எப்படி எனவும் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரான திருநங்கை நான் கடவுள் சினிமா புகழ் கீர்த்தனா பேசும்போது :
நாங்கள் 20 காளைகளை வளர்த்து வருகிறோம் எங்களுக்குத் தெரிந்த தொழில் என்ற அடிப்படையில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம்
திருநங்கைகள் முன்னேற வேண்டும் என்ற கூறியதால் சுயதொழில் செய்து இது போன்ற வீரமிக்க ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம் கடந்த 4 ஆண்டுகளாகப் பலமுறை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்திருக்கிறோம்
ஆனால் எங்களுக்கு இதுவரை ஒரு டோக்கன் கூடக் கிடைக்கவில்லை கடந்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது இரவு 2 மணிவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கியிருந்த விடுதி முன்பாகக் காத்திருந்து துணை முதலமைச்சரின் காலில் விழுந்து டோக்கன் கேட்டோம் அப்போதும் கூட டோக்கன் கிடைக்கவில்லை
குலுக்கல் முறையில் டோக்கன் வழங்கப்படுவதாகக் கூறுகிறார்கள் ஆனால் நடிகர் சூரி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் எப்படி ஆன்லைனில் குலுக்களில் முதல் 50 மாடுகளுக்குள் வருகிறது எனத் தெரியவில்லை
திருநங்கைகளாக இருக்கக்கூடிய எங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே கிடையாது நான் திமுகவைச் சேர்ந்த குடும்பத்தினர் என்றாலும் கூடத் திமுக ஆட்சியில் திருநங்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்
திருநங்கைகள் எனப் பெயர் மட்டும் வைத்திருக்கிறார்கள் ஆனால் எந்த முக்கியத்துவமும் எங்களுக்கு இல்லை பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு காளைகளைக் காக்க வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளாக 8 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறேன்
ஆனால் டோக்கன் கிடைக்காமல் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் கிடைக்கவில்லை என்றால் எங்களது ஆதார் ,ரேஷன் கார்டு மற்றும் திருநங்கைகள் அட்டை, வோட்டர் ஐடி உள்ளிட்டவைகளை தீயில் எரித்துவிட்டு காளைகளை விலைக்கு விற்றுவிட்டு மீண்டும் நாங்கள் பழைய நிலைக்கு வீதியில் சென்று யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என தெரிவித்தனர்
















