விரதம் இருப்பதன் மூலம் உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழியும் என்றும், சஷ்டி விரதம் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
புதுச்சேரி அண்ணா திடலில், பாஜக சார்பில் இளைஞர் எழுச்சி மாநாடு மற்றும் சுவாமி விவேகானந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, இளைஞர்கள் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்றும், உடற்பயிற்சி மற்றும் யோகாவை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கும் எனக்கூறிய அண்ணாமலை, சுயக்கட்டுப்பாடுடன் இளைஞர்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்தினார்
















