சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணி குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் போட்ட X தள பதிவில்
மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வர உள்ள நிலையில் அவர் பங்கேற்கும் மிகப் பிரம்மாண்டமான மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள மூன்று இடங்களை தேர்வு செய்து அதில் பாதுகாப்பு மற்றும் மக்கள் எளிதில் வந்து செல்வதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டோம்.
இந்த நிகழ்வில் அஇஅதிமுகவின் கோவை புறநகர் மாவட்ட செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா மற்றும் முன்னாள் அமைச்சர் திரு. @SPVelumanicbe
அவர்கள், பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு. கேசவ விநாயகம் அவர்கள், பாஜக மாநிலச் செயலாளர் திரு. @VinojBJPஅவர்கள், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் திரு. கிரி அவர்கள், சென்னை கிழக்குமாவட்ட தலைவர் திரு. குமார் அவர்கள், உடன் இருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்
















