வெளிநாட்டு சதியால் ஈரான் முழுவதும் போராட்டங்கள் தொடர எலான் மஸ்க் கொடுத்த ஸ்டார்லிங் இணையசேவை முக்கிய பங்காற்றியது… இந்த சூழலில் அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் ஸ்டார்லிங் சேவையை கத்தரித்துள்ளது
தலைநகர் டெஹ்ரானில் வீதிகளில் திரண்டு மக்கள், அரசுக்கு எதிராக உயர்த்திய போர்க்கொடிய கீழிறக்க மறுக்கின்றனர்…
ஈரானில் 18 நாட்களை கடந்து நீடிக்கும் மக்களின் போராட்டம், அரசையே அசைத்துப் பார்க்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது… கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, தனிமனித சுதந்திரம் பறிப்பு போன்ற காரணங்களால் எட்டுத்திக்கும் போராட்டங்கள் காட்டுத்தீயாய் பரவி இருக்கின்றன. இதுபோக அமெரிக்காவின் தலையீடும், ஸ்டார்லிங் இணைய சேவையும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், போராட்டத்தை வளர்த்து வருகின்றன.. போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அயத்துல்லா அலி கமேனி தலையிலான ஈரானிய அரசு, கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.. இதில் 500-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது…
12வது நாளில், கமேனியின் அரசு, நாடு முழுவதும் இணைய சேவை துண்டித்தது. இதனால் 8 கோடி மக்கள் வசிக்கும் ஈரான் டிஜிட்டல் சேவைகள் கிடைக்காமல் இருளில் தத்தளித்தது… அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வழங்கிய ஸ்டார்லிங் இணைய சேவை, போராட்டங்கள் மீண்டும் உச்சத்தை எட்ட வழிவகுத்தது.. இந்த சூழலில் ஸ்டார்லிங் சேவையின் உயிர் நாடியையும் அசைத்து பார்த்திருக்கிறார் ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனி.. ஈரான் டிஜிட்டல் சேவைகளை நிறுத்தும் வகையில் ராணுவ தர KILL SWITCH-ஐ பயன்படுத்தினார் அவர்…. 5000 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஸ்டார்லிங்க் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மிகுந்த செலவுபிடிக்க கூடிய இந்த நடவடிக்கை மூலம் 8 கோடி ஈரானியர்களை டிஜிட்டல் இருளில் மூழ்க வைத்துள்ளது அந்நாட்டு அரசு… இந்த சூழலில் ஸ்டார்லிங் செயற்கைக்கோளை செயலிழக்கச் செய்யும் அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பத்தை ரஷ்யா அல்லது சீனா வழங்கியிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். முந்தைய போராட்டங்களின் போது எதிர்ப்பாளர்கள் ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்தியதை கருத்தில் கொண்டு, சொந்த தொழில்நுட்பம் அல்லது சீனா, ரஷ்யாவிடமிருந்து பெற்ற ஜாமர் தொழில்நுட்பம் மூலம் ஸ்டார்லிங்க் சேவையை ஈரான் முடக்கியிருக்கலாம் என தெரிகிறது. ஈரானில் இணைய சேவையை மீட்டெடுப்பது குறித்து எலான் மஸ்குடன் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், 2014 முதல் ராணுவ நடவடிக்கைகளில், குறிப்பாக உக்ரைனில், ரஷ்யா ஜிபிஎஸ் ஜாமிங்கை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. அங்கு 2022 படையெடுப்பின்போது வழிசெலுத்தல், ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் அமெரிக்கா வழங்கிய ஜிபிஎஸ் மற்றும் ஸ்டார்லிங்க்-இணைக்கப்பட்ட அமைப்புகளை கூட ரஷ்யாவின் ஜாமர்கள் சீர்குலைத்ததாக ஸ்பேஸ் டாட் காம் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் ரஷ்யா பயன்படுத்தும் ஜாமர்கள், போலந்து மற்றும் எஸ்டோனியா போன்ற நேட்டோ நாடுகளில் விமானப் போக்குவரத்துப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோன்று மின்னணு போர் உருவகப்படுத்துதல்கள் மூலம் பெரிய அளவிலான நெரிசல் திறன்களை சீனாவும் நிரூபித்துள்ளது. இதில் ட்ரோன்களின் திரள்களைப் பயன்படுத்தி தைவான் அளவிலான பகுதிகளில் ஸ்டார்லிங்கிற்கு சாத்தியமான இடையூறுகளை ஏற்படுத்தும் பயற்சியும் அடங்கும். பெய்ஜிங் அதன் பெய்டூ செயற்கைக்கோள் அமைப்புடன் ஜிபிஎஸ் எதிர்ப்பு தொழில்நுட்பங்களிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்று தி எகனாமிஸ்ட் மற்றும் ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளையின் அறிக்கைகள் கூறுகின்றன..
ஸ்டார்லிங்க், வழக்கமான செயற்கைக்கோள்களை விட மிக அருகில் பறக்கும் குறைந்த-பூமி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி இணையத்தை வழங்குகிறது.இந்த குறைந்த உயரம் காரணமாக, தரவு வேகமாக பயணிக்கிறது, தாமதத்தைக் குறைக்கிறது மற்றும் வேகத்தை மேம்படுத்துகிறது.ஃபைபர் அல்லது மொபைல் நெட்வொர்க்குகளைப் போலல்லாமல், ஸ்டார்லிங்க் உள்ளூர் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை நம்பியிருக்கவில்லை, இது தொலைதூரப் பகுதிகளிலும் அரசாங்கத்தால் அமல்படுத்தப்படும் இணைய முடக்கத்தின் போதும் சேவையை வழங்கவல்லது.
இந்த சூழலில் ஈரானில் இணைய சேவை முடங்க, சீனா, ரஷ்யா உதவியிருக்கலாம் என்று கருதுகின்றனர் நிபுணர்கள்…. இது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினாலும், அரசின் மீதான நம்பிக்கையும், அடுத்தக்கட்ட நகர்வுமே போராட்டத்தை நிரந்தரமாக ஒழிக்கும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
















