மும்பையின் புதிய வளர்ச்சி சகாப்தம் தொடங்கியுள்ளதாக தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகராட்சியில் பாஜக கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா, மும்பை மாநகராட்சியில் பாஜகவுக்கு, தித்திப்பான “ரசமலாய்” வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றிக்காக அயராது உழைத்த பாஜகவினருக்கு நன்றி கூறிய அவர், மும்பையில் டிரிபிள் என்ஜின் சர்க்கார் அமைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
















