காரைக்கால் கார்னிவல் திருவிழாவில் புதுச்சேரி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஆகியோரை ஒன்றாக அமரவைத்து மாவட்ட ஆட்சியர் சாரட் வண்டி ஓட்டிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலில் 3 நாட்கள் நடைபெறும் கார்னிவல் திருவிழாவை அமைச்சர் திருமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, புதுச்சேரி அமைச்சர் திருமுருகன், திமுக எம்எல்ஏ நாஜிம் ஆகியோரை அருகருகே அமர வைத்து மாவட்ட ஆட்சியர் பிரகாஷ், சாரட் வண்டியை ஒட்டி சென்றார்.
அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் ஒரே வாகனத்தில் இரண்டு கிலோமீட்டர் பயணித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
















