வரும் 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. ஜிஎஸ்டி சாலையை ஒட்டி, சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதற்காக பிரத்யேக மேடை அமைத்து மைதானத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவற்றை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்
இதேபோல் பொதுக்கூட்டத்திற்கான இடத்தை காஞ்சிபுரம் சரக டிஐஜி சஷாந்த் சாய், செங்கல்பட்டு எஸ்.பி சிபின் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து பாஜக மாவட்ட நிர்வாகிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
















