மத்திய அரசின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கும் ஈரானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் மற்றும் உள்நாட்டு போராட்டங்களால் அமைதியின்மை நிலவுகிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்டவற்றால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதமாக போலீசார் கண்ணீர்புகைக் குண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனால் ஈரானில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியுறுமாறு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் ஈரானில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி தவித்த இந்தியர்கள், மத்திய அரசின் தீவிர நடவடிக்கையால் தற்போது பாதுகாப்பாக தாயகம் திரும்பி வருகின்றனர்.
















