புதுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது,
30 ஆண்டுகளுக்கு முன்பு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்று கூடி கல்லூரி பருவத்தில் நடந்த நினைவுகளை, மறக்க முடியாத அனுபவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1993 96 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய குடும்பத்தினருடன் ஒன்று கூடி கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர்.
கல்லூரி பருவத்தில் தங்களுக்கு மறக்க முடியாத நினைவுகள் மற்றும் தங்களுடைய அனுபவங்களை ஒருவர் ஒருவர் பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த முன்னாள் மாணவர்கள் பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது பணிபுரிந்து வருகின்றனர் இவர்களை ஒன்று சேர்ப்பதற்காக தற்போது நவீன உலகில் உள்ள வலைதளங்கள் செல்போன்கள் போன்றவற்றில் பலரை தொடர்பு கொண்டு தங்களுடைய குரூப்பில் இணைத்து இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்தனர்
ஆனால் தொடர்பு கொள்ள முடியாத நண்பர்களை ஒரு காலத்தில் உறவினர்களும் நண்பர்களும் எப்படி தங்களுக்குள் உள்ள நட்புகள் மற்றும் உறவுகளை பகிர்ந்து கொள்வதற்காக கடிதம் எழுதினார்களோ அதுபோல் கடிதங்களை அனுப்பி மற்றவர்களை தேடி கண்டுபிடித்து ஒன்றிணைத்தனர்.
இவர்கள் அனைவரும் கல்லூரி காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் வாழ்க்கையில் முன்னேறிய தருணங்கள் போன்றவற்றை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். தங்களுடைய குழந்தைகளையும் அறிமுகப்படுத்தி பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.
















