திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
சேவுகம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு வகையான வாழைப்பழங்களை ஆண்கள் மட்டுமே தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர்.
சுவாமி சன்னிதியை சென்றடைந்த பழங்கள் மீண்டும் கோபுர வாசல் முன்பாக எடுத்துவரப்பட்டன. இதனையடுத்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது வாழைப்பழங்கள் வீசப்பட்டன.
இதனை பிரசாதமாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் தங்கள் மீது விழும் பழங்களை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.
















