இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நயான் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். டெல்லி வந்த அவரை
பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் அவருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரதமர் மோடியும் அமீரக அதிபரும் ஒரே காரில் சென்றனர். இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்தும், வர்த்தகத்தை பலப்படுத்துவது குறித்தும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
















