ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக பயங்கரவாதிகளை அனுப்பி வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகவும், ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தின் மாண்ட்ரல் – சிங்போரா பகுதியில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து, ஆப்ரேஷன் டிராஷி – 1 என்ற பெயரில் சோனார் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடல் மட்டத்தில் இருந்து 12 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதியில் பயங்கரவாதிகள் வலுவான ரகசிய பதுங்கு குழியை அமைத்திருந்ததை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
அங்கு, 50 நுாடுல்ஸ் பாக்கெட்டுகள், காய்கறிகள், மசாலா பொருட்கள், பாஸ்மதி அரிசி உள்ளிட்டவைகள் இருந்ததாகவும், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான சைபுல்லா மற்றும் துணை தளபதி ஆதில் ஆகியோர் பயன்படுத்தி இருக்கலாம் எனவும் பாதுகாப்பு படையினர் சந்தேக்கின்றனர்.
மேலும், தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















