பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளுர்களுக்கு பேட்டியளித்த அவர், பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது பிரதமர் மோடி குறித்தான கேள்விக்கு, அவர் தனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர் என பதிலளித்தார்.
மேலும், இந்தியா – அமெரிக்கா இடையே சிறப்புவாய்ந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
















