ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் இருக்கிறது எனவும்
மதுராந்தகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டதாக கூறிய பிரதமர் மோடி,
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் அர்ப்பணிப்பும் தமிழக மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
















