மதுராந்தகத்தில் NDA கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தலாக 2026 சட்டமன்ற தேர்தல் அமையும் என தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறிய அவர், 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் வேதனையை மட்டுமே அனுபவித்ததாக தெரிவித்தார்.
நானும் தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள்
இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உடனான கருத்து வேறுபாட்டை மறந்து விட்டோம்
திமுக ஆட்சியை வீழ்த்தவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம்
பிரதமர் மோடி இந்த மண்ணில் கால் வைத்த உடன் சூரியன் மறைந்துவிட்டது
திமுகவில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை; எந்த தகுதியும் இல்லாத உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?
வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும்
ஊழல் நிறைந்த திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது
நானும் டிடிவி.தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
















