கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி - ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

Manikandan by Manikandan
Jan 23, 2026, 04:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஃபேல் நிறுவனத்திடமிருந்து, ஐஸ் பிரேக்கர் குரூஸ் ஏவுகணையை வாங்குவதற்கு இந்திய விமானப்படை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் கடல்சார் பாதுகாப்பில் இது ஒரு வெற்றி வியூகமாக பார்க்கப்படுகிறது

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியா முழு வீச்சில் தயாராகி வருகிறது.

பாதுகாப்புத் துறையிலும் தன்னிறைவு என்ற நோக்கத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில் இந்திய பசிபிக் கடல் பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் மும்முரமாக இருக்கும் இந்தியா, ஐஸ் பிரேக்கர் குரூஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

4 மீட்டர் நீளமும் 400 கிலோவுக்கும் குறைவான எடையும் கொண்ட இந்த ஏவுகணை, 250 பவுண்டு வெடிமருத்துகளைச் சுமந்து கொண்டு 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியதாகும்.

AI தொழில்நுட்பத்தால் நுண்ணிய தாக்குதல்களை மேற்கொள்ளும் Ice Breaker ஏவுகணை முழுமையாக தானியங்கி ஏவுகணை என்றாலும், தேவைப்படும் போது கடற்படைவீரர்களும் ஏவுகணையின் போக்கை மாற்றமுடியும் வகையில் இந்த ஏவுகணை உருவாக்கப் பட்டுள்ளது.

மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும் Ice Breaker, Very Low Observable தொழில்நுட்பத்தின் மூலம் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஏமாற்றிவிட்டு குறித்த இலக்கைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும், Electro-optical seeker மற்றும் AI target recognition மூலமாக, சரியான இலக்குகளை மட்டும் துல்லியமாக தாக்கும் Ice Breaker, GPS இல்லாமலும் இயங்கும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

அனைத்து வானிலை நிலைகளிலும் மின்னணுப் போர் நிறைந்துள்ள சூழல்களிலும் சிறப்பாகச் செயல்படும் இந்த Ice Breaker ஏவுகணையை இந்திய விமானப்படை வாங்க உள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு ஏற்றதாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனம், Ice Breaker, ஏவுகணையின் வகைகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக ரஃபேல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே அமெரிக்காவிலிருந்து 24 MH-60R ‘Romeo’ Sea Hawk ஹெலிகாப்டர்களை வாங்கியபோது, ​​அந்த ஒப்பந்தத்தில் AGM-114 Hellfire ஏவுகணைகள் மற்றும் Mk-54 இலகுரக torpedo-கள் போன்றவற்றை வாங்கவும் இந்தியக் கடற்படை முடிவு செய்திருந்தது.

நீண்ட தூரக் கப்பல் எதிர்ப்புத் தாக்குதல்களுக்காக அமெரிக்கக் கடற்படையால் பயன்படுத்தப்படும் Kongsberg Naval Strike ஏவுகணை சுமார் 407 கிலோகிராம் எடை கொண்டது என்பதால் அந்த ஏவுகணைகளை வாங்க விரும்பவில்லை.

பொருத்தமான குறைந்த எடைகொண்ட ஏவுகணைகளைத் தேடிய இந்திய கடற்படை, Ice Breaker ஏவுகணையை தேர்வு செய்துள்ளது.

MH-60R ஹெலிகாப்டரில் மறைந்திருந்து தாக்கும் திறன் கொண்ட, 300 கிலோமீட்டர் தூரம் செல்லும் ஐஸ் பிரேக்கர் குரூஸ் ஏவுகணையை பொருத்துவது, இந்திய கடற்படையில் ஆற்றலை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Ice Breaker ஏவுகணையை, சுமார் 380 கிலோகிராம் எடையும் 55 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய திறனும் கொண்ட இந்தியாவின் கப்பல் எதிர்ப்பு குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளுடன் இணைக்கவும் DRDO திட்டமிட்டுள்ளது.

Tags: MISSILEIndiaIAFரபேல்RafaelIcebreaker missileSea Hawk
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies