காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு - பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்
Jan 24, 2026, 09:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

Manikandan by Manikandan
Jan 24, 2026, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன் மொழிந்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக ட்ரம்ப் தலைமையில் அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது.

இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் கேப்ரியல், ட்ரம்பின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோருடன் பிரிட்டனின் முன்னாள் பிரதமா் டோனி பிளோ் இடம் பெற்றுள்ளனர்.

போரால் கடுமையாகப் பாதிக்கப் பட்ட காசா பகுதியை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த வாரியத்தில் இணைவதற்கு, இந்தியா பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கெனவே துருக்கி, கத்தாா் ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ட்ரம்பின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசு தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவால் அந்நாட்டில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

கொள்கை அரசியல் மற்றும் ஒழுக்க ரீதியாக அரசின் இந்த முடிவு தவறானது மற்றும் நியாயப்படுத்த முடியாதது என்ற கூறியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் Allama Raja Nasir Abbas அல்லாமா ராஜா நசீர் அப்பாஸ், இந்த அமைதி திட்டம் ஒரு புதிய காலனித்துவ முயற்சியின் தெளிவான அடையாளம் என்றும், காசா புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் அரசியல் மேற்பார்வை ஆகியவற்றை அந்நிய சக்திகளின் கைகளில் ஒப்படைக்கும் முயற்சி என்றும் தனது எகஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், குறுகிய கால கணக்கீட்டால் எடுக்கப்படும் வெளியுறவுக் கொள்கை முடிவுகள் நாட்டுக்கு பெரும்பாலும் நீடித்த சிக்கல்களையே உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதேபோல், நாடாளுமன்றத்தில் பொது விவாதம் ஏதும் நடத்தாமல் அமைதி வாரியத்தில் சேரும் முடிவு, பிரதமர் Shehbaz Sharif அரசு, நாட்டை புறக்கணிதுள்ளதாக (தெஹ்ரீக்-இ-தஹாபுஸ்-இ-அயீன்-இ-பாகிஸ்தான் ) தெஹ்ரீக்-இ-தஹாபுஸ்-இ-அயீன்-இ-பாகிஸ்தான் தலைவர் (முஸ்தபா நவாஸ் கோகர்) முஸ்தபா நவாஸ் கோகர் தெரிவித்துள்ளார்.

மேலும் , நிரந்தர உறுப்பினராவதற்கு ஒரு பில்லியன் டாலர் என்று விலை வைத்திருப்பதால் இது பணக்காரர்களின் சங்கத்தை உருவாக்குகிறது என்றும், அத்தகைய சங்கங்கள் பெரும்பாலும் என்ன செய்யும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசு ஒரு விவேகமற்ற முடிவை எடுத்துள்ளதாக விமர்சித்துள்ள ஐநா சபைக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் (மலீஹா லோதி), மலீஹா லோதி, தான் எடுக்கும் எடுக்கப் போகும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு சர்வதேச ஆதரவையும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் பெறுவதற்காகவே ட்ரம்ப் இந்த அமைதி வாரியத்தை உருவாக்க்கியுள்ளார் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜாஹித் ஹுசைன், இஸ்லாமாபாத் அவசரமாக முடிவெடுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது ஆட்சியாளர்களின் வெட்கக்கேடான துரோகம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் சமூக ஆர்வலர் அம்மார் அலி ஜான் பதிவிட்டுள்ளார்.

பாலஸ்தீனிய இனப்படுகொலையை நடத்திய இஸ்ரேலுடன் இந்த ‘அமைதி வாரியத்தில்’ பாகிஸ்தான் அமரப் போகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ள எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான பாத்திமா பூட்டோ இது பாகிஸ்தானுக்கு அவமானம் என்று பதிவிட்டுள்ளார்.

Tags: PEACE COMMITTEEpakistanusaisrealusPAK GAZAPEACE GAZA SUMMIT
ShareTweetSendShare
Previous Post

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

Next Post

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

Related News

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் – அன்புமணி

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies