இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக வருகிறார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது.கடந்த 23ம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.
இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவர் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழகம் வருகிறார் அமித் ஷா
இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்
















