மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி வைத்த விசிகவின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது என தெரிவித்தார்.
கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என ஏன் கூறவில்லை ? என கேள்வி எழுப்பிய அவர், கோரிக்கை நிறைவேற்றாதவரோடு கூட்டணி அமைத்தால், எப்படி தீர்வு கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
















