மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இரவு நேரத்தில் ஒருபுறம் பெட்ரோல் குண்டுவீசப்பட்ட சம்பவமும், மறுபுறம் இருவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்ற சம்பவமும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
மதுரை மாநகர் சோலை அழகுபுரம் மகாலட்சுமி கோயில் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் இரு இடங்களில் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதேபோன்று, ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் 2 இளைஞர்களை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதோடு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும், அரிவாளால் தாக்கியதில் படுகாயமடைந்த 2 இளைஞர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இருவேறு குற்ற சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர்.
















