பழனி முருகன் கோயிலுக்கு 3வது ஆண்டாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினார்.
கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவியும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வருகை தந்தார்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினார்.
3வது ஆண்டாகப் பழனி முருகனுக்கு மாலை அணிந்து கொண்ட வானதி சீனிவாசனுடன் 50க்கும் மேற்பட்ட மகளிர் உறுப்பினர்களும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். பின்னர், அரோகரா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
















