தமிழக காங்கிரஸ், புதிய பாதையில் பயணத்தை தொடரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சேலத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான தங்கபாலு பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமராஜரையும், காங்கிரஸ் நிர்வாகிகளையும் திமுகவினர் தொடர்ந்து அவமதித்து வரும் சூழலில், காங்கிரஸ் தலைவர்கள் மெளனம் காப்பது ஏன்? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் இலக்கு மத்தியில்தான் என்றும், அதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும் என திமுகவினர் அவமதிப்பதை ஏற்பது போல பதிலளித்துள்ளார்.
















