பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஜய் சொல்கிறாரே, திரிஷா பாதுகாப்பா தானே இருக்கிறார் என சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பெண்களை முன்னேற்ற பல்வேறு திட்டங்களை திமுக செயல்படுத்துவதாகவும், பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்று நம்புவதாகவும் கூறினார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தவெக தலைவர் விஜய் சொல்கிறார், திரிஷா பாதுகாப்பாதானே இருக்கிறார் எனவும் உங்களை போன்று தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் விமர்சித்தார்.
















