திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி தேவையில்லாமல் தம்மை வம்புக்கு இழுக்கக் கூடாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார்.
மதுரையில் இருக்கும் உங்களுக்கு கரூரில் இருக்கும் தன்னைப் பற்றிப் பேச என்ன அவசியம் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியை பொது வெளியில் அவமதிப்பதை வேடிக்கை பார்க்கமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என கட்சி தலைமையிடம் கோரிக்கை வைக்கவுள்ளதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்மானம் காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
















