குடியரசு தினத்தில் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பதக்கங்களை இரவல் பெற்று விழா நடத்திய அவலம்
போலீசாருக்கு வழங்க வேண்டிய முதலமைச்சரின் பதக்கங்கள் தயாராகி வராததால் பல மாவட்டங்களில் குடியரசு தின விழாவில் பெரும் குழப்பம்,
தமிழக போலீசில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தின விழாக்களில் முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படும் அதேபோல் இந்த ஆண்டு பதக்கங்கள் உரிய நேரத்தில் தயாராகி வராததால் விழாவில் பதக்கம் வழங்க முடியாமல் திணறிய நெல்லை மாவட்டம் நிர்வாகம்.
முந்தைய ஆண்டுகளில் பதக்கம் பெற்ற போலீசாரின் வீடுகளுக்கு சென்று பழைய பதக்கங்களை வாங்கி வந்து விழாவில் வழங்கிய அவலம் அதன்பிறகு இரவல் வாங்கி வந்த பதக்கங்களை நெல்லை எஸ்.பி. பிரசன்ன குமார் முன்னிலையில் போலீசாருக்கு அணிவித்த மாவட்ட ஆட்சியர் சுகுமார்
இரவல் வாங்கிய பதக்கங்களும் போதாததால் குடியரசு தின விழாவில் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிய போலீசார் வேறுவழியின்றி முதல் வரிசையில் பதக்கம் பெற்ற போலீசாரிடம் இருந்து மீண்டும் இரவல் பெற்று மற்றவர்களுக்கு அணிவித்த அவலம்
இரவல் பதக்கங்களை பெற்று குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அணிவித்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
















