தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தின் மேடாராம் கிராமத்தில் பழங்குடியினத் திருவிழாவான சம்மக்கா-சாரலம்மா ஜாதரா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
பழங்குடியினப் பெண் தெய்வங்களான சம்மக்கா மற்றும் சாரலம்மாவைக் கௌரவிக்கும் விதமாக இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

பக்தர்கள் தங்களின் எடைக்கு இணையான வெல்லத்தை காணிக்கையாகச் செலுத்தி வழிபாடு நடத்துகின்றனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பழங்குடியின திருவிழாவாக இந்நிகழ்வு கருதப்படுகிறது.

இந்த மகா ஜாதராவில் கலந்து கொள்வதற்காகத் தெலங்கானா மட்டுமின்றி ஆந்திரா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
















