திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஊழல் நிறைந்த திமுக ஆட்சியின் கீழ் தமிழகத்தில் எது நடந்தாலும் பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளை குறைசொல்லி வந்த திருமாவளவன், தற்போது 10 நூற்றாண்டுகளுக்கு மேலாக பின்னோக்கி சென்று மாபெரும் மன்னர்களான சோழர்கள் மற்றும் பாண்டியர்களை அவதூறு செய்துள்ளதாகவும் கண்டித்துள்ளார்.
ராஜராஜன், ராஜேந்திரனின் பெயர்கள் தமிழ் பெயர்களா என்று கேள்வி எழுப்பினால் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி மற்றும் கோபாலபுரம் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் தமிழ் பெயர்களா என கேட்கக்கூடும் எனவும் கூறியுள்ளார்.
திருமாவளவனின் பேச்சு அவரது வரலாற்று அறியாமையை மட்டுமே வெளிப்படுத்துவதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
















