அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், அதிமுக ஆட்சியில் 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் வழங்கப்படும் என்றும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விரைவில் பல சலுகைகள் அறிவிக்கப்படும் இபிஎஸ் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு தீபாவளிக்கும் இலவச பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்றும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் எனறும் அவர் தெரிவித்தார்.
















