தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. குறிப்பாக, 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று, மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
விழா சிறப்பாக நடைபெற்ற போதிலும், போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்
















