திமுக பிராந்திய அரசு வீழ்ச்சியடையும் நாளை மக்கள் எதிர்நோக்கி காத்திருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரவித்துள்ள்ர்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே! மாநிலத்திற்கு பட்ஜெட் போடச் சொல்லி 5 வருட ஆட்சியை வழங்கிய மக்களுக்கு, நீங்கள் அல்வா கிண்டிக் கொடுத்த கதை அனைவருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு போடும் பட்ஜெட் என்பது எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு திட்டத்திலும் தமிழகமும் சேர்ந்தே பயன்பெறும். தேர்தல் என்பதால் எதையோ கவர்ச்சிகரமாக அறிவித்து ஆட்சியைப் பிடித்து மக்களை ஏமாற்றும் வழக்கம் உங்களுடையது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலையான வளர்ச்சியை விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பாணி அதுவல்ல. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பேச எந்த அருகதையும் இல்லாத இந்தத் திமுக பிராந்திய ஆட்சி வீழ்ச்சியடையும் நாளை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















