ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
ஊக்கத்தொகையை ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், பட்டப்படிப்பு முடித்த அனைத்து பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
















