வரும் சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அருப்புக் கோட்டை அருகே உள்ள கல்குறிச்சியில் தி.மு.க. இளைஞரணி தென் மண்டல மாநாடு நடைபெற்றது. துணை முதலமைச்சரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், மாநில கட்சிகளெல்லாம் ஆட்சியை பிடிக்க முடியும் என்பதை நிகழ்த்தி காட்டியது திமுக தான் என்றார். மத்திய அரசுடன் ஒப்பீடு செய்யும் அனைத்து துறைகளிலும் தமிழகம் தான் முதலிடம் என்று கூறினார். நடைபெறும் தேர்தல் திமுகவுக்கும் – என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
















