பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் - நயினார் நாகேந்திரன் பெருமிதம்!
May 6, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் விருந்தில் “நாளை நமதே” பாடல் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 8, 2026, 02:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட அரசு விருந்தில், தமிழகத்தின் பெருமைமிக்க அடையாளமான எம்ஜிஆர் அவர்களின் “நாளை நமதே” என்ற புரட்சிகரமான திரைப்படப் பாடல் பாடப்பட்டிருப்பது நமக்கான பெருமை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், சாதாரண ஏழைத் தாய்க்கு மகனாகப் பிறந்து, தமிழ்த் திரையுலகில் தமது பொது வாழ்க்கையைத் துவங்கி, பின்பு தமிழக அரசியலில் ஆகப்பெரும் ஆளுமையாகத் திகழ்ந்ததோடு, தமது ஈகை குணத்தால் பொன்மனச் செம்மல் என இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு, கடல் கடந்த நாடுகளின் தலைவர்களும் ரசிகர்களாக இருப்பதைக் கண்டு ஒரு தமிழனாக நான் கர்வம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், துவளும் மனதைத் தாங்கிப் பிடிக்கும் உத்வேகப் பாடலாகத் தமிழக மக்களின் மனதினை ஆக்கிரமித்திருக்கும் “நாளை நமதே” என்ற பாடலை, நமது பாரதத்தின் வளர்ச்சியை வெற்றிப் பாதையில் தூக்கிச் சுமக்கும் தன்னலமற்ற தலைவர்  நரேந்திர மோடிக்கு மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அர்ப்பணித்துள்ளது ஆகப் பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “காலங்கள் எனும் சோலைகள் மலர்ந்து, காய் கனியாகும் நமக்கென வளர்ந்து” என்ற அப்பாடலின் வரிகள்  பிரதமர் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையான “வளர்ந்த பாரதம்” என்ற இலக்கையும், இன்னும் சிறிது காலத்தில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அரசியல் மாற்றங்களையும் அப்படியே அடிக்கோடிட்டுக் காட்டுவது போலவே இருப்பது தற்செயலான அதிசயம் என்றும் தெரிவித்துள்ளார்.

பிற நாட்டு அதிபர்கள்பாரதப் பிரதமர் அவர்களை எதிர்காலத்தின் நம்பிக்கையாகப் பார்க்கிறார்கள் என்பதற்கான சான்றான இந்நிகழ்வைத் தொடர்ந்து எத்தனை முறை பார்த்தாலும் திகட்டவே திகட்டாது என்றும் நயினார் புகழாரம் சூட்டியுள்ளார்.

Tags: pm modi in malaysiapm modi malaysia visitpm modi malaysia speechnallai namathe songnainar welcomepm modi malaysiapm modi malaysia livepm modi malaysia newspm modi malaysia trip
ShareTweetSendShare
Previous Post

சேலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டி – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

Next Post

சென்னையில் போக்குவரத்துறை சார்பில் சாலை விழிப்புணர்வு சைக்ளோத்தான் போட்டி!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies