அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டதாகவும், தாம் அவற்றை சரி செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்றும், மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் இல்லை எனவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாருக்கும் வாக்கு சீட்டு முறையில் வாக்களிக்க கூடாது போன்ற விதிமுறைகளை கொண்டு வர வலியுறுத்தி இருக்கிறார்.
















