மும்பை மாநகராட்சியை, 44 ஆண்டுகளுக்கு பின் பாஜக கைப்பற்றிய நிலையில், போட்டியே இல்லாமல் பாஜகவின் ரிது தவ்டே மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
நாட்டின் பணக்கார மாநராட்சியான மும்பை மாநகராட்சியை உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி கடந்த 25 ஆண்டுகளாக ஆண்டு வந்தது. கடந்த மாதம் 15 ஆம் தேதி மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற்றது.
227 உறுப்பினர்களை கொண்ட இந்த மாநகராட்சியில், 89 இடங்களை பாஜக கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதையடுத்து 44 ஆண்டுகளுக்கு பின் மும்பை மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது.
மாநகராட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாஜக உறுப்பினர் ரிது தவ்டே, மேயராகவும், கூட்டணி கட்சியான சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் காதி துணை மேயராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
















