தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் - சி.வி.சண்முகம்
Apr 1, 2026, 02:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தல் முடிந்தபின்னர் திமுகவினர் மக்களை மறந்து விடுவார்கள் – சி.வி.சண்முகம்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 07:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக அறிவிப்பால் திமுக கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேர்தல் முடிந்தபின் திமுகவினர் மக்களை மறந்து விடுவதாக விமர்சித்தார்.

மகளிருக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதாக அதிமுக அறிவித்ததால் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 2021ஆம் ஆண்டு வழங்க வேண்டிய மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு 2026-ல் வழங்குவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதேபோல் கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுமென போலீசார் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லிலும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தோல்வி பயத்தால் திமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளதாக விமர்சித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு உண்டா, இல்லையா என்று பட்டிமன்றம் நடப்பதாக விமர்சித்தார். மேலும் அதிமுக கூட்டணி வளர்பிறை என்றும், திமுக கூட்டணி தேய்பிறை எனவும் அவர் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி, வாலாஜாபேட்டை, அறந்தாங்கி, நெல்லை மானூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், 125 நாள் வேலைத் திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயற்சிப்பதாக கூறி கண்டன முழக்கமிட்டனர்.

Tags: DMKvillupuramVallamformer minister C.V. Shanmugamcv shanmugam speechmagalir speech
ShareTweetSendShare
Previous Post

குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட திமுக ஆட்சி அலங்கோலத்தை மறைக்க ரூ. 5000 – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுடன் முதல்வர் சந்திப்பு – உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்!

Related News

24 மணி நேரத்தில் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பம் ரெடி ; “அகஸ்தியா-1” மூலம் தனியார் விண்வெளித் துறையில் புரட்சி – சிறப்பு தொகுப்பு !

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் தொடக்கம்!

ரூ.84 சொத்து மதிப்புடன் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies