இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மோசமான ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புத்தகத்தை கையில் எடுக்க வேண்டிய மாணவர்கள், கஞ்சாவை எடுத்து செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பாஜக மீனவர் பிரிவு சார்பில் சிங்காரவேலர் 167ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு சிங்காரவேலர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மீனவர்களுக்கு வலைகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், இந்தியாவிலேயே முதல் கடன்காரன் மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளார்கள் என்றும் போதை பொருட்கள் விற்பனை, கடன் தற்கொலைகள் அதிகமாக நடைபெறுவதும் தமிழ்நாட்டில்தான் எனவும் குற்றம்சாட்டினார்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மோசமான ஆட்சி நடப்பதாவும், சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
















