தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக அரசைக் கண்டித்து NDA கூட்டணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பாஜக, அதிமுக, அமமுக மற்றும் பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று, தமிழக அரசின் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
அப்போது, அங்கு சென்ற விசிக நிர்வாகிகள் திடீரென பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விசிக நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகளின் கூட்டத்தை நோக்கி காலணிகளை வீசி எறிந்தனர்.
இதனால் இரு தரப்பினரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பாஜக கட்சி கொடியை பிடுங்கி எரிந்ததுடன், பாஜக நிர்வாகிகளை விசிகவினர் கற்களால் தாக்கினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்த கலவரத்தை காவல்துறையினர் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
















