பீகார் மாநிலத்தை சேர்ந்த கடைசி மாவோயிஸ்ட் என்று கருதப்பட்ட சுரேஷ் கோடா போலீஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் கோடா மீது 15-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களைக் கொன்றது உட்பட மொத்தம் 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரைப் பிடிக்க 3 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுரேஷ் கோடா, டிஐஜி மற்றும் எஸ்பி முன்னிலையில் தனது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நக்சல் இல்லாத மாநிலமாக பீகாரை மாற்றுவதற்கு மார்ச் வரை இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பீகார் இந்த சாதனையை எட்டியுள்ளது.
















