ஊழல் என்ற பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடப் பிரிவுகளிலும் திமுக பெயில் ஆகிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவைக்கு வருகை வந்தார்.
அப்போது திமுக அரசின் “All Fail” என்ற அறிவிக்கையை அவர் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் என்ற பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் திமுக அரசு பெயில் ஆகிவிட்டதாக கூறினார்.
கடந்த தேர்தலின்போது திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறிய நயினார் நாகேந்திரன், உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக அரசு ஆட்சி செய்வதாக குற்றஞ்சாட்டினார்.
















