திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேடசந்தூரை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரசாமிநாதன், தனது இல்லத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த மணி என்பவர், அவருக்கு சால்வை அணிவித்தார். அச்சமயத்தில் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால், திமுக பிரமுகரின் கழுத்தில் குத்தியுள்ளார்.
தடுக்க முயன்ற நாச்சிமுத்து என்பவரும் கத்தியால் குத்தப்பட்டார். இதனையடுத்து அந்த நபரை மடக்கி பிடித்த திமுகவினர், காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காயமடைந்த திமுக பிரமுகர் வீரசாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோர் சிகிச்சைக்காக வேடச்சந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
















