விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாஜக தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நிர்வாகியை திமுகவினர் தாக்க முயன்றனர்.
மேலமங்கலம் கிராமத்தில் பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை மற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது திமுகவைச் சேர்ந்த இருவர், ராதாகிருஷ்ணனின் பேச்சை இடைமறித்து அவரை ஆபாசமாகத் திட்டி தாக்க முயன்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
















