அலி கமேனியின் தீவிர விசுவாசி : ஈரானின் அடுத்த வாரிசு : யார் இந்த அலி லரிஜானி? - சிறப்பு தொகுப்பு!
Mar 19, 2026, 05:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அலி கமேனியின் தீவிர விசுவாசி : ஈரானின் அடுத்த வாரிசு : யார் இந்த அலி லரிஜானி? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டாக ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், தேசிய அவசர நிலையை சமாளிக்க, ஈரானின் உச்ச தலைவராக கமேனி அலி லாரிஜானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இதுகுறித்து ஒரு செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்…

81 வயதான அயலுல்லா அலி கமேனி, மத்திய கிழக்கில் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ஈரானின் உச்சபட்ச அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர். அதனால் அவருக்குப் பின் அவரது பதவிக்கு யார் வருவார் என்பது ஈரானுக்கு மட்டுமின்றி அந்த பிராந்தியம் மற்றும் உலகின் பிற பகுதிகளிலும் எதிர்பார்ப்பு நிலவியது..

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்லாமிய குடியரசு நீடிப்பதற்காக ஒரு திட்டத்தை இறுதி செய்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.. ஈரானை அமெரிக்கா தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கமேனியை முதல் இலக்காக வைத்துள்ளன.

இந்த சூழலில் தனது அரசியல் வாரிசாக அலி லாரிஜானி என்பவரை காமேனி தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கமேனிக்கு பிறகு, அடுத்த வாரிசாக தனது முதன்மை ஆலோசகரும், உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளருமான லாரிஜானியை கமேனி அஙகீகரித்துள்ளதாக தெரிகிறது.

அவர் மதகுரு இல்லை என்பதால், பாரம்பரிய அர்த்தத்தில் ஒரு சாத்தியமான வாரிசாக கருத முடியாது என்றாலும், அவரது உண்மையான நாட்டுப்பற்று காரணமாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

67 வயதான லாரிஜானி, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் நிறுவன உறுப்பினராகவும், 2008 முதல் 2020ம் ஆண்டு 12 ஆண்டுகள் நாடாளுமன்ற சபாநாயகராகவும் இருந்தவர். சீனா உடனான ஒப்பந்தத்திற்கு மூளையாக செயல்பட்ட இவர், ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

இஸ்ரேலுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று அப்போதே தெரிவித்திருந்தார் அலி லாரிஜானி… அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதை தவிர வேறு வழியில்லை என்பதும் லாரிஜானியின் உறுதியான நிலைப்பாடாகவே இருந்தது..

நியூயார்க் டைம்ஸ் செய்திகளின்படி, லாரிஜானி தற்போது வகிக்கும் பதவியின் அந்தஸ்து என்பது, ஈரான் அதிபர் மசூர் பெஷேஷ்கியனை விட அதிகம்… ஜனவரி மாதம் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப், ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவருடன் உரையாட லாரிஜானிக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியிருந்தார் அதிபர் பெஷேஷ்கியன்… அந்தளவுக்கு நம்பகத்தன்மை உடையவர் லாரிஜானி.

ஈரான் உச்சபட்ச தலைவரின் அதிகாரம் வானளாவியது.. உள்நாடு மட்டுமின்றி உலக நாடுகளுடனான ஈரானின் அணுகுமுறை, கொள்கைகள் உள்ளிட்டவற்றையும் உச்சபட்ச தலைவரே இறுதி செய்கிறார். இதன் காரணமாகத்தான் இப்பதவியில் இருப்பவரை அமெரிக்கா குறி வைக்கிறது. ஈரான் மீதான தாக்குதலுக்கு மத்தியில் உச்சபட்ச தலைவர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: iran attacksiran us bases attackiran attack uaetrump to attack iraniran attackedisrael iran attack todayiran attack dubaiKhamenei Ali Larijaniiran attack rumoriran uae attackiran attack on dubaiiran attack israelus attacks iranisrael iran attackiran attacks dubaiiran attackus israel iran attackAYATOLLAH ALI KHAMENEIiran attacks us bases
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி – முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம்!

Next Post

ஆஃப்கனிஸ்தானுடன் நேரடிப் போர் : பாகிஸ்தானை துவம்சம் செய்ய காத்திருக்கும் கொரில்லா படை – சிறப்பு தொகுப்பு!

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies