இன்று ஆரம்பமாகும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் அன்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் உங்கள் பள்ளிப் பயணத்தின் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள இந்த தருணம், உங்கள் உழைப்பும் முயற்சியும் வெளிப்படும் நேரமாகும். தன்னம்பிக்கையுடன், மனஅமைதியுடன் தேர்வுகளை எதிர்கொண்டு, உங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்துங்கள் என தெரிவித்தார்
மேலும் உங்கள் கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைத்து, உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று, உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகவும், வெற்றிகளால் நிரம்பியதாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
இன்று தொடங்கவுள்ள, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக தேசிய பொதுக்குழு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள். அனைவரும் நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துக்கள் என அண்ணாமலை தெரிவித்தார்
















