தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி கோவையில் வீடு வீடாக அண்டா விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு அண்டா வழங்கப்படுவதாக அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரவி சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அண்டாவின் மூடியில் கோவை திமுக பொறுபபாளராக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், திமுக சார்பில் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட சம்பவத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
















