விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட மாணவி குடும்பத்தினரிடம் செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவி குடும்பத்தினரை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்ஃபோன் மூலமாக மாணவியின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் கூறினார்.
அப்போது பேசிய அவர், இந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம், இந்த அரசு சரியான நடவடிக்கை எடுக்கிறதா என்று பார்ப்போம், இல்லை என்றால் அதிமுக ஆட்சி வந்ததும் உரிய நடவடிக்கை எடுப்போம், தைரியமாக இருங்கள் என்று கூறி ஆறுதல் தெரிவித்தார்.
















