மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்களை, வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தானேவில் எரிவாயு சிலிண்டர் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் உதவியுடன் அங்கிருந்த குடோனில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்ட 330 சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
















