திமுகவுக்கு பயந்துதான் அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா கூறியது உண்மைக்கு புறம்பான கருத்து என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு பயந்துதான் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் கூறியிருந்தார்.
அவரின் பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் கருத்து உண்மைக்கு புறம்பானது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜூனாவின் அவதூறு கருத்தை கண்டித்து, தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
















