மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், ஈரானுடன் தான் பேச விரும்புவதாகவும், ஆனால் அந்நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த தலைவர்கள் என்று யாரும் இல்லை எனவும் கூறினார்.
மேலும், கடந்த 2 நாட்களில் மட்டும் ஈரானின் 58 கப்பல்களை அமெரிக்க ராணுவம் தாக்கி மூழ்கடித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார். போரினால் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது குறித்து பேசிய அவர், இது ஒரு சிறிய விலையேற்றம்தான் எனவும், போர் முடிந்தவுடன் விலை பெருமளவில் குறையும் எனவும் தெரிவித்தார்.
















