இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில், அரசியல் விளம்பரங்களை வெளியிட, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், மாநில அல்லது மாவட்ட அளவிலான, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம், முன் அனுமதி சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக் கூடிய உள்ளடக்கங்கள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளின், சமூக வலைதள பக்கங்களில், இத்தகைய தவறான அல்லது சட்ட விரோத வீடியோக்கள் கண்டறியப்பட்டால், மூன்று மணி நேரத்திற்குள், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
















